TNPSC குரூப் தேர்வுகளில் அதிரடி சீர்திருத்தம்

          டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுகளில் ஏற்பட்ட முறைகேடுகள் காரணமாக இப்போது டிஎன்பிஎஸ்சி குரூப் 4 மற்றும் குரூப் தேர்வுகளில் பல சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. கடந்த ஆண்டே டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுகள் நடந்து முடிந்து டிசம்பர் மாதம் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.



          சந்தேகிக்கும் விதமாக ஒரே தேர்வுக் கூடத்தில் தேர்வு எழுதிய நிறைய நபர்கள் தேர்வுகளில் முதல் மதிப்பெண் எடுத்திருந்தார்கள். இதற்காக ஒரு சில விசாரணைகளை மேற்கொண்டது, தமிழக அரசு. விசாரணைக்கு பிறகு சிலர் மேல் குற்றங்கள் உறுதி செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்கள். 

அவசர கூட்டம் :
          இனிமேல் இது மாதிரியான குற்றங்கள் நடக்கக்கூடாது என்று நேற்று பிப்ரவரி 14 ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் ஒரு கூட்டு சந்திப்பு வைத்து பல சீர்திருத்தங்களை கொண்டு வந்திருந்தார்கள். அந்த சீர்திருத்தங்களில் என்னவென்று தொடர்ந்து பார்க்கலாம். 

சீர்திருத்தங்கள் :
          இனிமேல் குரூப் 4 மற்றும் குரூப் 2A தேர்வுகள் இருநிலை தேர்வுகளாக நடக்கும். ஒரு தேர்வர் முதற்கட்ட தேர்வை வெற்றி கொண்டால் மட்டுமே இரண்டாம் கட்ட தேர்வை எழுத இயலும்.இதுவே இவர்கள் கொண்டு வந்த முதல் சீர்திருத்தம்.
          இரண்டாம் தீர்வானது தேர்வர்கள் இனிமேல் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்க வேண்டும் என்பதாகும். முதலில் ஏ பி சி டி என நான்கு ஆப்ஷன் இருக்கும். இனிமேல் ஆப்ஷன் E என புது ஆப்ஷனும் இருக்கும். இந்த ஆப்ஷன் எதற்காக என்றால் தேர்வர்கள் எனக்கு பதில் தெரியவில்லை அல்லது பதில் அளிக்க விருப்பமில்லை என்பதை குறிப்பிடுவதற்காகத்தான்.

   இரண்டாம் திருத்தத்திற்கு காரணம்:
           நடந்த முறைகேடுகள் முக்கியமாக கருதப்படுவது தேர்வர்கள் எழுதாத விடைகளுக்கு யாரோ ஒரு இடைத்தரகர் விடை எழுதியதாக குறிப்பிடுவதுதான் இதைத் தவிர்க்கவே இந்த ஆப்ஷனை டிஎன்பிஎஸ்சி ஆணையம் கொண்டு வந்துள்ளது.
          மேலும் ஒரு திருத்தமாக தேர்வர்கள் இனிமேல் தேர்வு தொடங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்னரே தேர்வு கூடத்திற்கு வந்திருக்க வேண்டும் என கூறியுள்ளனர்.

          மேலும் இனிமேல் தேர்வர்களின் கையொப்பம் அல்லாது கைரேகையை வாங்க இருப்பதாகவும் கூறியுள்ளனர்.

          அதுமட்டுமன்றி இனிமேல் தேர்வின் வினா மற்றும் விடைத்தாள்கள் அதிநவீன வசதிகளான ஜிபிஎஸ் மற்றும் Surveillance கேமராக்கள் மூலம் பாதுகாக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இவை அனைத்தும் டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் இருந்தே பார்க்க ஏற்பாடு செய்ய இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.


          மேலும் டிஎன்பிஎஸ்சி எழுத நினைக்கும் தேர்வர்களுக்கு ஆதார் கார்டு கட்டாயம் எனவும் தெரிவித்துள்ளனர்.
          அதுமட்டுமன்றி தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி சீர்திருத்தங்கள் குறித்த சந்தேகங்களை கேட்டு அறிந்து கொள்ளவும் முறைகேடுகள் குறித்து கம்ப்ளைன்ட் செய்யவும் டிஎன்பிஎஸ்சி வெப்சைட்டில் தனியாக ஒரு தளத்தை தரப்போவதாக கூறியுள்ளனர்.
 மேலும் கம்ப்ளைன்ட் செய்தவர்களில் இரகசியத்தன்மை கண்டிப்பாக பாதுகாக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர். 

இவை அனைத்தும் தான் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 மற்றும் குரூப் 2A தேர்வுகளில் மாற்றிய சீர்திருத்தங்களாக டிஎன்பிஎஸ்சி கமிஷன் வெளியிட்டுள்ளவை.

இந்த பதிவு கண்டிப்பாக உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்.

Comments