POCO வின் அடுத்த போன் வெளியானது - Release Date and Name - 2020

சுமார் ஒன்றரை வருடத்திற்கு முன்பு POCO என்ற நிறுவனம் Xiaomi என்ற நிறுவனத்தால் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த POCO நிறுவனம் POCO F1 என்ற தனது முதல் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போன் அதிக விலையில் இருக்கும் அனைத்து ஸ்மார்ட் போனில் வரும் அனைத்து வசதிகளையும் உள்ளடக்கியவாறு குறைந்த விலையில் தரப்பட்டது.



இந்த விலையில் ஒன்றரை வருடத்திற்கு முன்பு அவர்கள் தந்த ஸ்னாப்ட்ராகன்( Snapdragon ) 845 ப்ராசசர் இந்த 20000 ரூபாய் விலையில் இப்போதுவரை எந்த ஸ்மார்ட்போன் நிறுவனமும் தரவில்லை. இதன் முதல் போன் POCO F1ஐ தொடர்ந்து எந்த போன்களையும் இந்த நிறுவனம் வெளியிடவில்லை.இது வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை அளித்தது. 
அனைத்து நிறுவன குழுக்களும்.


இந்த காலகட்டத்தில் செய்யும் ஒன்றை தற்போது இந்த Xiaomi மற்றும் POCO நிறுவனங்களும் செய்துள்ளது. அது என்னவென்றால் Poco வை தனி நிறுவனமாக அறிவித்தது தான். இது ஒரு வழியில் நல்லது இல்லை என்றாலும் மற்றொரு வகையில் POCO நிறுவனம் தனது அடுத்த ஸ்மார்ட்போனை கூடிய விரைவில் கொண்டு வரும் என்ற நம்பிக்கையை வாடிக்கையாளர்களுக்கு அளித்தது. 


இந்த அறிவிப்பு வந்ததில் இருந்து POCO நிறுவனம் தனது அடுத்த போனின் டீஸர் மற்றும் அதன் வசதிகள் போன்றவற்றை தனது ட்விட்டர் பக்கத்தில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறது. தனது அடுத்த போனின் பெயர் என்னவாக இருக்கும் என்று கண்டுபிடிப்பவர்களுக்கு ஒரு சிறந்த பரிசு இருப்பதாகவும் கூறியிருந்தனர். POCO வின் அடுத்த போனின் பெயரை ஒரு சிலர் அவர்கள் வெளியிட்ட புகைப்படங்களில் இருந்து Decode செய்தும் பலர் கூறினார்கள். 


இந்நிலையில் இந்த நிறுவனம் தனது அடுத்த போனின் பெயரையும் அதன் வெளியீட்டு நாளையும் கூறியிருக்கிறார்கள். இந்த நிறுவனத்தின் அடுத்த போனின் பெயர் POCO X2 என்பதையும் இந்த போனை வரும் பிப்ரவரி மாதம் நான்காம் தேதி அன்று வெளியிட போவதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த நிறுவனம் ஒன்றரை வருடம் கழித்து தனது அடுத்த ஸ்மார்ட்போனை வெளியிடுவதால் இதற்கு கூடுதலான எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. மேலும் இந்த கூடுதல் எதிர்பார்ப்பை கூட்டும் வகையில் இந்த போன் யாரும் எதிர் பார்க்காத விலையில் வெளியிடப்படும் என இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.


இந்த போன் வந்தால் நீங்கள் வாங்குவீர்களா மாட்டிர்களா என்ற உங்கள் கருத்தை கமெண்ட்டில் பதிவு செய்யவும்.

Comments