Whatsapp Voice Messageகளை Play செய்யாமல் அதனுள் இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி ?

          வணக்கம் நண்பர்களே !
          முன்போல் இப்போதெல்லாம் அனைவரும் ஒருவருக்கொருவர் நேரில் கண்டு பேசிக்கொள்வதில்லை. அதற்காகத்தான் இப்பொழுது பல செயலிகள் இங்கு உருவெடுத்துள்ளன. அவற்றில் ஒரு முக்கியமான செயலி தான் Whatsapp. அப்படிப்பட்ட அந்த செயலியில் பெரும்பாலானோருக்கு தெரியாத ஒரு அம்சத்தை( feature ) குறித்து தான் இந்த பதிவில் காணவிருக்கிறோம்.


          அது என்னவென்றால் ஒருவருக்கு வந்த வாய்ஸ் மெசேஜை திறந்து பார்க்காமலேயே அவற்றில் என்ன இருக்கிறது என்பதை எழுத்து வடிவத்தில்  காண்பிப்பது என்பது தான்.  பலரும் அவர்களுக்கு வந்த வாய்ஸ் மெசேஜை மற்றவர் முன்னிலையில் கேட்பதை விரும்புவதில்லை. அதற்காகத்தான் இந்த செயலி. இந்த செயலியை நீங்கள் கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து (Google Play Store) டவுன்லோட் செய்து கொள்ள இயலும்.

                                          Click here to download the app

          டவுன்லோட் செய்த பிறகு உங்களுக்கு  எவர் அனுப்பிய வாய்ஸ் மெசேஜை எழுத்து வடிவத்தில் மாற்ற வேண்டுமோ அந்த அரட்டை பக்கத்திற்கு ( chat page )சென்று அவரது வாய்ஸ் மெசேஜை long press செய்து கொள்ளுங்கள்.

          பின்னர் அங்குள்ள ஷேர் என்ற ஒரு ஆப்ஷனை press செய்யவும். அந்த ஆப்ஷனை க்ளிக் செய்தால் கீழே உங்களுக்கு நிறைய ஆப்ஷன்கள் காண்பிக்கப்படும்.

          அவற்றுள் ஒன்றான Transcriber என்ற அந்த ஆப்ஷனை தொடுங்கள். அந்த ஆப்ஷனை தொட்டீர்களானால் அந்த voice message எழுத்து வடிவத்தில் மாற்றப்பட்டு காண்பிக்கப்படும்.

          இதனை நீங்கள் copy செய்து கொள்வது மட்டுமல்லாமல் மற்றவர்களுக்கும் இதை பகிர்ந்து ( Share ) கொள்ளவும் முடியும்.

          இந்த செய்தியை தமிழ் மட்டுமல்லாமல் பல மொழிகளிலும் மொழிபெயர்த்து கொள்ள இயலும்.
       
          வேறு மொழிகளை மாற்றியமைப்பதற்கு, இந்த செயலியினுள் சென்று அங்கு உள்ள Settings ஆப்ஷனை பிரஸ் செய்யவும். பின்பு Language in use என்று ஒரு ஆப்ஷன் காண்பிக்கப்படும். அதில் உங்களுக்கு  வேண்டுமான மொழியைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளவும்.

          இந்த செயலியை பதிவிறக்கம் செய்வதற்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

               1.Transcriber App :
Transcriber Application


          இதுபோன்று இருக்கும் ஓரிரு செயலிகளின் லிங்கையும் பின்வருவனவாக குறிப்பிட்டுள்ளேன். அவற்றையும் இன்ஸ்டால் செய்து உபயோகித்து பாருங்கள்.

               2.Live Transcriber App : Click here to download
                  (app owned by Google)

               3.Voice to text App : Click here to download

          இது குறித்து நீங்கள் தெளிவாக தெரிந்து கொள்ள நாங்கள் யூடியூப்பில் வெளியிட்டுள்ள காணொளி பதிவை பார்க்கவும். 

          இதுபோன்ற பல தகவல்களை தெரிந்துகொள்ள நாங்கள் இருக்கும் உங்களுக்கு பிடித்தமான  சமூக ஊடகங்களில் எங்களைத் தொடருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி.
வணக்கம்.

Comments